Pregnancy Health Tips
 Pregnancy Health Tips

 Pregnancy Health Tips :

சில மூலிகைகள் உயர் இரத்த அழுத்தம்,

கருப்பை சுருங்குதலை தூண்டும். கர்ப்பப்பை சுருங்குவதால் கருச்சிதைவு, குறைபிரசவம் அல்லது கருவிலிருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது.

மக்கள் இயற்கை வைத்தியம் செய்ய விரும்புகின்றனர். ஆனால், சரியான வழிகாட்டல் இல்லாமல் மூலிகைகளை உண்பது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

▪ கற்றாழை:
கற்றாழையை கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வது கருச்சிதைவு அல்லது குழந்தைக்கு பிறவிக் குறைபாடு ஏற்படுவதற்கு வழி வகுத்துவிடுகிறது.

▪ வெள்ளைப்பூண்டு:
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக் கொண்டால் கருச்சிதைவை ஏற்படுத்தும்.

▪ ஆல்டர் பக்தார்ன்:
கர்ப்பிணிகளுக்கு வலியையும் குமட்டலையும் உருவாக்கக்கூடிய மூலிகை இது. பொங்கலுக்கு வாசலில் வைக்கப்படும் கூழைப்பூவோட பேரு தான் இது.

▪ நார்த்தங்காய்:
அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, இருதய செயல்பாட்டில் கோளாறை உருவாக்கி, பக்கவாதத்தையும் ஏற்படுத்தும். தாய் மற்றும் குழந்தை இருவரையும் சேர்த்து பாதிப்பை அதிகமாகவே ஏற்படுத்தும்.

▪ கிராம்பு:
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கிராம்பு சாப்பிட்டால், கல்லீரலில் பிரச்சனை, இரத்தம் உறைதலையும் கிராம்பு ஏற்படுத்தும்.

▪ பார்பெர்ரி:
கருப்பையை அதிகமாக சுருங்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கு அதிகமாகவே ஆபத்தை ஏற்படுத்தும்.

▪ மது:
மேலே கூறப்பட்ட மூலிகைகள் தவிர்த்து தாய்மைப்பேறு காலத்தில் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பயன்தரும் மூலிகைகளானாலும் கர்ப்ப காலத்தில் அவற்றை தவிர்ப்பதே நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here