Thirumanam Serial
திருமணம் சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் திடீரென விலகியுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் திருமணம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் சிந்துராம், ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் நடித்து வரும் இந்த சீரியலில் ப்ரீத்தி சர்மா ஹீரோயின் தங்கையாக நடித்து வந்தார்.

தற்போது இவர் சீரியலில் இருந்து விலகியுள்ளாராம். இதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சித்தி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். அதனால் திருமணம் சீரியலுக்கு நாட்களை அதிகம் ஒதுக்க முடியவில்லை. இதனால் டீம் வேறொரு நடிகையை நடிக்க வைக்கலாமா என ஆலோசித்து வந்தனர்.

இதனால் நானே இந்த சீரியலில் இருந்து விலகி கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

????????

A post shared by Preethi__sharma (@preethi__sharma) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.