தல ரசிகர்கள் கொண்டாடிய பிரீ ரிலீஸ் பார்ட்டியின் வீடியோ வைரல்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் மற்றும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நேரடியாக மோத இருக்கிறது.

வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு போட்டியாக… தல ரசிகர்கள் கொண்டாடிய ப்ரீ ரிலீஸ் பார்ட்டி.!!

இதனால் இரு படங்கள் மீதும் அதிக எதிர்பார்ப்புகளுடன் தல, தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவி வரும் நிலையில் நேற்றைய தினம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் ஆக்கிரமித்து இருந்தது.

வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு போட்டியாக… தல ரசிகர்கள் கொண்டாடிய ப்ரீ ரிலீஸ் பார்ட்டி.!!

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் விஜய்யின் இசை வெளியீட்டு விழாக்கு போட்டியாக சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் துணிவு பிரீ ரிலீஸ் விழா ஒன்றை ஏற்பாடு செய்து பட்டாசுகளை வெடித்து, அஜித்தின் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதன் வீடியோக்கள் தற்போது அனைத்து தல ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.