Kovil

🙏 கோயில்களில் வழிபாடு செய்யும்போது சுவாமி சிலைகளைத் தொட்டு வணங்கலாமா என்றால், நிச்சயம் தொடாமல் வணங்குவதுதான் நல்லது.

🙏 இறைவன் மேன்மை பொருந்தியவர் என்பதையும், அவரைத் தொடும் தகுதி நமக்கு இல்லை என்பதாலும், தொடாமல் தள்ளி நின்று வணங்குவது நல்லது.

🙏 ஆலயம் தொழச் செல்வதற்கென்று பல விதிமுறைகள் இருக்கின்றன.
ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் நிச்சயம் சுவாமி சிலைகளைத் தொடக்கூடாது.

🙏 கோயில்களில் முக்கியமான பூஜைகளைச் செய்யச் செல்லும் அவர்கள் மிகவும் கவனமுடன்  குளித்து அனுஷ்டானங்களை முடித்துவிட்டு மிகவும் ஆசாரத்துடன் சென்று பூஜை செய்வார்கள். ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் அதற்குரிய புனிதம் காக்கப்படவேண்டும்.

🙏 சில முக்கியமான பூஜைகள், தனி மனிதர்களுக்காக மட்டும் செய்யப்படுவதில்லை. உலகநன்மைக்காக, உலகிலுள்ள சகலஜீவராசிகளுக்காகவும்தான் பூஜை செய்யப்படுகிறது. அதாவது அந்த சக்தி அப்படியே பாதுக்காக்கப்படவேண்டும். எனவே நாம் கண்டிப்பாக சுவாமி சிலைகளைத் தொடக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here