Prashanth's Gaja Relief
Prashanth's Gaja Relief
Prashanth Gaja Relief : நடிகர் பிரசாந்த் எவ்வித விளம்பரமும் இல்லாமல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவியுள்ளார்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பாக உருவாகி இருந்த கஜா புயல் தமிழகத்தின் வழியாக கரையை கடந்த போது டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரசாந்த் எவ்வித விளம்பரமும் ஆரவாரமும் இல்லாமல் இரு தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். இதுவரை வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த விஷியம் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்த புகைப்படங்களால் தெரிய வந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here