அந்தகன் படம் குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்ட பிரசாந்த்.
தமிழ் சினிமாவில் 90 களின் ஃபேவரைட் நடிகராக இருப்பவர் பிரசாந்த்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது நடிப்பில் வெளியான படம் அந்தகன். இவரது அப்பா தியாகராஜன் இயக்கத்திலும் தயாரிப்பிலும் இந்த படம் வெளியானது.
இதில் சிம்ரன் ,பிரியா ஆனந்த், பூவையார், யோகி பாபு, ஊர்வசி, கார்த்திக், சமுத்திரகனி, கே எஸ் ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் பிரசாந்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்துள்ளது. அந்தகன் வெளியான நாள் முதல் இன்று வரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனைவராலும் பாராட்டும் படமாக அந்தகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வசூலிலும் தூள் கிளப்பியும் வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரசாந்த் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில்,”அந்தகன் உலகம் முழுவதும் பம்பர் ஹிட்”என்ற பதிவை போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.