ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் பிரசாந்த்.
தமிழ் சினிமாவில் 90ஸ் களின் ஃபேவரட் ஹீரோவாக இருந்தவர் பிரசாந்த். இவர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.
இது மட்டும் இல்லாமல் இவர் தனது அப்பா இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணியில் பிஸியாக இருந்து வரும் பிரசாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியாக உள்ள அந்தகன் படம் 9 தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் யூடியூப் பேட்டிக்காக பைக்கில் தொகுப்பாளினியுடன் ஹெல்மெட் இல்லாமல் சென்றுள்ளார். இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பிரசாந்த்தை கண்டித்துள்ளனர்.