Prashanth About Thala Ajith
Prashanth About Thala Ajith

தன்னால் தல அஜித்துக்கு அசிங்கம் ஏற்பட்டதாக பல வருடங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் குறித்து தற்போது பேசியுள்ளார் பிரசாந்த்.

Prashanth About Thala Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். குடும்ப வாழ்க்கை தொழில் சார்ந்த பிரச்சனை ஆகியவற்றால் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

இப்போது பிரசாந்த் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு பிரசாந்த், அஜித் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரசாந்துக்கு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தது போல புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.

விஜய்தான் சூப்பர் ஸ்டார், என்னை வியக்க வைத்த நடிகர் – ஓபனாக கூறிய முன்னணி நடிகை.!

இதுவரை இது குறித்து பேசாமல் இருந்த பிரசாந்த் தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அஜித்துக்கும் மாலை அணிவிக்கப்பட்டது அந்த புகைப்படம் வெளிவரவில்லை என கூறியுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் பல வதந்திகளை பரப்பி விடுவார்கள் அதற்கெல்லாம் உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டே இருக்க முடியாது இதனால் நம்முடைய நேரம் தான் வீணாகும் என கூறியுள்ளார்.

எனக்கு தற்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், ஆனால் அதைப் பற்றி எல்லாம் பேச வேண்டாம் என கூறியுள்ளார்.