திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பிரசாந்திடம் பேட்டி எடுக்கும் போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இரண்டு தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த தியாகராஜனின் மகன். மக்களின் பேவரட் ஹீரோவாக இருக்கும் பிரசாந்த் அவர்கள் சில பல காரணங்களால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் “அந்தகன்”.

உருவாகிறது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் - பிரசாந்த் சொன்ன ஹாப்பி நியூஸ்.

இப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

உருவாகிறது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் - பிரசாந்த் சொன்ன ஹாப்பி நியூஸ்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக சென்றுள்ளார். அப்போது அங்கே நடிகர் பிரசாந்த் அவர்கள் அளித்த பேட்டியில் “அந்தகன்” படம் விரைவில் வெளியாகும். “வின்னர் 2-ஆம் பாகம்” முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும் என்று சூப்பரான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவல்களை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.