Prashant Neel Next Movie Hero

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Prashant Neel Next Movie Hero : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இந்த படத்தினை பிரஷாந்த் நீல் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இவர் நடிகர் பிரபாஸ் வைத்து தெலுங்கில் சலார் என்ற படத்தினை இயக்கி வருகிறார். சலார் திரைப்படத்தை அடுத்து பிரசாந்த் நீல் யாரை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

தளபதி விஜய் குறித்து கேட்டதற்கு அவர் பவர் பேங்க் என கூறியதால் இருவரும் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி பிரஷாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.