Johnny Trailer

Johnny Trailer : தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக சாக்லேட் பாயாக வலம் வருபவர் பிரசாந்த்.

இதுவரை பல மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் பிரசாந்த் தற்போது தன்னுடைய அப்பாவான தியாகராஜன் அவர்களின் தயாரிப்பு, திரைக்கதை மற்றும் வசனத்தில் பா.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜானி.

சஞ்சிதா செட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ஆனந்த ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு ரஞ்சன் துரை ராஜ் பின்னணி இசை உருவாக்கியுள்ளார். சிவ சரவணன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள எம்.வி பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கும் போது கள்ள நோட்டுகளால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசும் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ட்ரைலரில் பிரசாந்த் நடிப்பில் மிரட்டியுள்ளார்.ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்துள்ளார்.

இந்த ட்ரைலரின் மூலம் பிரசாந்த் ரசிகர்களுக்கு பக்கா மாஸான ட்ரீட் காத்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.