Prasanth Explain on Rajinikanth Political Entry

ரஜினியை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவலுக்கு பிரசாந்த் விளக்கமளித்துள்ளார்.

Prasanth Explain on Rajinikanth Political Entry : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய புதிய கட்சி குறித்த அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் எனவும் கட்சியின் தொடக்கம் ஜனவரியில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்குவது தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் அடுத்த முதல்வர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் அவருக்காக பிரச்சாரத்தில் நடிகர் பிரசாந்த் ஈடுபட இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனை அறிந்த பிரசாந்த் உடனடியாக இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார்.

டாப் ஸ்டார் பிரசாந்த் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.