Ajith Prasanna
அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் பிரசன்னா

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக பிரசன்னா நடிப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

ரசிகர்களும் இதனால் ப்ரசன்னாவிற்கு வாழ்த்துக்களை கூறி வர தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். தல அஜித்துடன் நடிப்பதாக பரவிய தகவலில் உண்மை இல்லை.

உங்களின் அன்பிற்கு நன்றி, நிச்சயம் விரைவில் தல அஜித்துடன் சேர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.