Mankatha 2
பிரபல நடிகர் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒரு வேலை மங்காத்தா 2 படத்தில் இணைகிறாரா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா, இவர் வலிமையில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

இதனையடுத்து அவர் வலிமையில் நான் நடிக்கவில்லை, விரைவில் தல அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன் என கூறி பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த பிரேம் ஜி சீட்டு கட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார், இதற்கு பிரசன்னா என்ன ரம்மி விளையாட கூப்பிடறீங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரம்மி, சீட்டு கட்டு இதையெல்லாம் வைத்து பிரசன்னா மங்காத்தா 2 படத்தில் நடிக்க உள்ளார், அதை தான் இப்படி சூசகமாக பேசி கொள்கின்றனர் என ரசிகர்களே ஒரு முடிவிற்கு வந்துள்ளனர்.

உண்மை என்ன என்பதை படத்தின் அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.