Prasanna Chat About Thala Thalapathy
Prasanna Chat About Thala Thalapathy

அஜித் விஜயுடன் நடிப்பது பற்றி பேசியுள்ளார் பிரசன்னா.

Prasanna Chat About Thala Thalapathy : கரோனா வைரஸ் இன் காரணமாக தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டிலேயே முடங்கிப்போய் இருக்கும் பிரபலங்கள் அடிக்கடி ரசிகர்களுடன் சமூக வலைதளப் பக்கங்களில் உரையாடி வருகின்றனர்.

பிரபல நடிகருடன் சுனைனாவுக்கு திருமணம், யார் அந்த நடிகர் தெரியுமா? – உண்மையை கசிய விட்ட நடிகர்.!

அப்படி நடிகர் பிரசன்னா நேற்று ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் உரையாடியுள்ளார். ரசிகர் ஒருவர் அஜித்துடன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என கேட்டுள்ளார்.

அதற்கு பிரசன்னா அஜித் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இன்னொரு நடிகர் விஜயுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எப்படி உணர்வீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பிரசன்னா வானளவு திகைப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.