நடிகை பிரணிதா தனது மகளின் புகைப்படத்தை முதல்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் காண்பித்துள்ளார்.

சகுனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகைதான் பிரணிதா. இவர் இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவின் மாசு என்கின்ற மாசிலாமணி, அதர்வாவின் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்திருக்கும் நடிகை பிரணிதா.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தொழிலதிபர் பிரஜித் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த பிரணிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்திருக்கும் நடிகை பிரணிதா.

தற்போது அந்தக் குழந்தையின் முகத்தை முதன்முறையாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகை பிரணிதா தனது குழந்தைக்கு ஆரணா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அக்குழந்தையின் அழகான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.