Pranitha Comments on ThalaThalapathy
Pranitha Comments on ThalaThalapathy

நான் தல ரசிகை என மங்காத்தா போட்டோவை பதிவிட்டு மாஸ் காட்டியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Pranitha Comments on ThalaThalapathy : தமிழ் சினிமாவில் சகுனி படத்தின் மூலமாக பிரபலமானவர் பிரணிதா. தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் தற்போது ஹிந்தியிலும் கால் எடுத்து வைத்துள்ளார்.

அஜய்தேவ் கன்னுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இவர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு படபடவென பதிலளித்துள்ளார்.

அப்படி அஜித் ரசிகர் ஒருவர் தல அஜித்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு கேட்டதற்கு நான் அஜித்தின் தீவிர ரசிகை. தமிழ் தெரியாத போதே அஜித் படங்களைப் பார்த்து ரசித்ததும் உண்டு என கூறியுள்ளார்.

ஒரு பக்கம் என் ஜி கே, இன்னொரு பக்கம் கத்தி – ஒரே நேரத்தில் 2 BGM-ஐ வாசித்து மிரட்டிய சிறுமி (வீடியோவுடன் இதோ)

இவர் ரசிகர்களுடன் உரையாடியதால் #AskPranitha என்ற டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

சூர்யா மற்றும் கார்த்தியுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கேட்டதற்கு இருவரும் அமைதியான மனிதர்கள் என கூறி உள்ளார்.

இன்னொரு ரசிகர் விஜய் பற்றி கேட்டதற்கு அவருடைய ஸ்டைலுக்கு நான் ரசிகை என கூறியுள்ளார்.