Thalaivar 168
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் சூரி காமெடி நடிகராக கமிட்டாகியுள்ளார். அவரை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும் பிரகாஷ் ராஜ் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாக படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. பிரகாஷ் ராஜ் வில்லனாகவும் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.