தளபதி 66-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Prakash Raj in Thalapathy 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் சரத்குமார் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜூம் விஜய்க்கு இன்னொரு அண்ணனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை படங்களில் விஜய்க்கு வில்லனாக மோதி வந்த பிரகாஷ்ராஜ் அண்ணனாக நடிக்க இருப்பது எந்த அளவிற்கு வரவேற்பு தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.