Prajin Daughter Name Secrets

விபத்தில் இறந்து போன தன் அண்ணனின் நினைவாக தன்னுடைய மகளுக்கு பெயர் ஒன்றை வைத்துள்ளதாக சான்ட்ரா தெரிவித்துள்ளார்.

Prajin Daughter Name Secrets : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக வலம் வருபவர் பிரஜன். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் சாண்ட்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பத்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு கடந்த வருடம் அழகிய இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுவரை பால் மட்டுமே குடித்து வந்த குழந்தைகளுக்கு முதன் முறையாக கோவிலில் வைத்து உணவை கொடுக்கும் அன்னபிரஷன் விழாவை கொண்டாடினர்.

அதன் பின்னர் தன்னுடைய மகள்களுடன் அண்ணண் அண்ணி ஆகியோர் இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய அண்ணன் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். அவர் இறந்த சோகத்தில் மறுநாளே தன்னுடைய அண்ணி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அவர்களின் நினைவாக என் மகளுக்கு செல்லப் பெயர் ஒன்றை வைத்துள்ளேன். என்னுடைய அண்ணன் அண்ணியை எப்போதும் பாத்து என்றுதான் கூப்பிடுவார். அந்தப் பெயரை என்னுடைய மகளுக்கு செல்லப் பெயராக வைத்துள்ளேன் என சான்ட்ரா தெரிவித்துள்ளார்.

சாண்ட்ராவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகம் உள்ளதா என ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.