விஜய் டிவி பிரஜன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Prajin As Hero in Ninaivellam Neeyada : தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரஜன். விஜய் டிவியில் இவர் நடித்த சின்னத்தம்பி அன்புடன் குஷி ஆகிய சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியைப் பெற்றது.

வெள்ளித்திரையில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் பிரஜனின் கனவு‌. பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக மலையாளத்தில் லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சிலந்தி பட இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் உருவாக்கம் நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தில் மதுமிதா, காளி வெங்கட், மயில்சாமி, கேப்ரில்லா, சினாமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இளையராஜா இசையமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, பாண்டிச்சேரி, மதுரை, கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.

இன்னைக்குத்தான் உருப்படியான காரியம் பண்ணிருக்க – Madhurai Muthu-வின் அட்டகாசமான Shopping

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.