Praise Indian Team
Praise Indian Team

Praise Indian Team – ஆதிரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த இந்தியா அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டி தொடரையும் வெற்று சாதனை படைத்து உள்ளது.

இந்தியாவை பொறுத்த வரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது இல்லை.

இந்த அவபெயரை தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடைந்த வெற்றியின் மூலம் நீங்கி உள்ளது.

முன்னதாக நடந்த ஒருநாள் போட்டியில் 1-1 என சம நிலையில் இருந்தது இந்தியா மற்றும் ஆஸ்., அணி. வெற்றி யாருக்கு என்று தீர்மானிக்கும் இருட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

சிறப்பாக பந்து வீசி ஆஸ்., அணியை 48.4 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்., அணியில் ஹன்ஸ்கோம் 58 ரன்களும், ஷான்மார்ஷ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்க வீரர்கள் சர்மா 9 மற்றும் தவான் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கோலி 46 ரங்களில் ஆட்டமிழந்தார். தோனி மற்றும் ஜாதவ் இருவரும் 87 மற்றும் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனால் இந்தியா 234 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்., அணியை வென்றது. இதனால் 2-1 என தொடரை கைப்பற்றியது.

டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடந்த இந்த ஒருநாள் போட்டியிலும் தொடரை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.