கொரோனா குமார் திரைப்படம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்த அப்டேட் களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கிடையில் நடிகர் சிம்பு நடிக்கவிருந்த ‘கொரோனா குமார்’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது, கோகுல் இயக்கத்தில் பக்காவான காமெடி மற்றும் காதல் படமாக உருவாக இருந்த ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருந்தார். இதற்கான புரோமோ வீடியோவும் வெகு நாட்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விலகி விட்டதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.