இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் விருது பெற்ற புகைப்படத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் லவ் டுடே. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

கையில் விருதுடன் நன்றி தெரிவித்த பிரதிப் ரங்கநாதன்!!… பிரபல தெலுங்கு நடிகருடன் வைரலாகும் புகைப்படம் இதோ.!

ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைப் பாராட்டி பல திரை பிரபலங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

கையில் விருதுடன் நன்றி தெரிவித்த பிரதிப் ரங்கநாதன்!!… பிரபல தெலுங்கு நடிகருடன் வைரலாகும் புகைப்படம் இதோ.!

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை தெலுங்கு திரை உலகின் பிரபல முன்னணி நட்சத்திரமான சிரஞ்சீவி வழங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.