சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்க தளபதி விஜய் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க போகிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பிரதீப் ரங்கநாதன் விஜய் படத்தை இயக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பிரதீப் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்க்கு சயின்ஸ் பிக்சன் கதை ஒன்றை சொல்லி இருக்கிறேன். அவருக்கும் கதை பிடித்து விட்டது. ஆனால் அவர்களது தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இதைப் பற்றி நான் பேச முடியாது என தெரிவித்துள்ளார்.

தளபதி 67 படத்தின் வேலைகள் நிறைவடைந்தவுடன் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.