Prachi Babyshower Function Photos

மகத் மனைவிக்கு வளைகாப்பு முடிந்த நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Prachi Babyshower Function Photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மகத் ராகவேந்திரா. சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் சிம்பு நடித்து வரும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இவர் பிராய்ச்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நடந்து முடிந்த நிலையில் தற்போது பிராய்ச்சி கர்பமாக இருந்து வருகிறார். சமீபத்தில் வளைகாப்பு நடந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.