பிரபுதேவா வட மாநில மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களை இவர் இயக்கியுள்ளார். கோலிவுட் முதல் பாலிவுட் சினிமா வரை பல்வேறு படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

பிரபுதேவாவுக்கு ரகசியமாக முடிந்த திருமணம்.. மணப்பெண் யார்? பிரபலம் அளித்த பேட்டியால் வெளியான பரபரப்பு தகவல்

இவருடைய மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் பிரபல நடிகையை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. திருமணம் வரை சென்ற இந்த காதல் திடீரென பிரேக்கப்பில் முடிந்தது.

பிரபுதேவாவுக்கு ரகசியமாக முடிந்த திருமணம்.. மணப்பெண் யார்? பிரபலம் அளித்த பேட்டியால் வெளியான பரபரப்பு தகவல்

இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா கொரோனா காலத்தில் பீகாரை சார்ந்த டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக பிரபலங்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் மருத்துவர் ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.