Prabhu Solomon in Azagiya Kanne

அழகிய கண்ணே என்ற படத்தில் நடிகர் அவதாரம் எடுக்க உள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.

Prabhu Solomon in Azagiya Kanne : பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”.

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும் , கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தில் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார் .

நடிகர்கள் : லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன் நடிக்கிறார் .

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் – R.விஜயகுமார்
தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)
பாடல்கள் – வைரமுத்து
இசை – N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத் தமிழன்
நடனம் – ராதிகா

சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .
தயாரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்