Prabhas film clash at August : Suriya | Thala Ajith | Prabhas | Kaappaan | Nerkonda Paarvai | Arya | Saaho | Mohanlal | Latest Cinema News

 Prabhas film clash at August :

முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தின் பாடல் குறித்த அப்டேட் – செம காம்பினேஷன்.!

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மாத இறுதியில் சூர்யா நடிக்கும் காப்பான் படமும் வெளியாகிறது. அதாவது ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த படம் வெளியாகிறது. இதற்கிடையில் தற்போது பிரபாஸின் சாஹோ படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.