தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி-ன் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் பவுடர். வித்யா பிரதீப், நிகில் முருகன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

ஒன் லைன் :

பவுடர் பூசிக்கொண்டு தன் முகத்தை மறைக்கும் மனிதர்களின் ஒரிஜினல் முகத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

பட்டையை கிளப்புதா பவுடர்?? பவுடர் படத்தின் முழு விமர்சனம்.!

கதைக்களம் :

1) தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்எல்ஏ-வை ஒரு கும்பல் போட்டு தள்ளுகிறது. இது ஒரு கதை.

2) கமிஷனர் வீட்டில் ஒருவர் தொலைந்து போக அதைப்பற்றி விசாரிக்க நிகில் முருகனை இரவில் அழைக்கிறார் கமிஷனர் ரயில் ரவி.

3) சினிமாவில் பணிபுரியும் விஜய்ஸ்ரீ தன் மகன் ஆன்லைன் வகுப்புக்காக கேட்ட செல்போனுக்காக வேறுவழி இல்லாமல் ஒரு கொலை பழிக்கு ஆளாகிறார்.

4) தன் மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனிடம் நியாயம் கேட்கிறார் தந்தை வையாபுரி.

5) காதலித்தபோது தன்னை நெருக்கமாக படம் எடுத்து மிரட்டும் காதலனிடம் பணம் கொடுக்க வருகிறார் வித்யா பிரதீப். அதிகாலை இவருக்கு திருமணம்.

6) இதனிடையில் சென்னையில் மனிதக்கறி வேட்டை.. இரவில் திருடும் கும்பல்… காதலர்களின் ரொமான்ஸ்.. என திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.

இந்தக் குட்டி குட்டிக் கதைகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து இறுதியில் வித்தியாசமான க்ளைமாக்‌ஸ் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் டைரக்டர் விஜய்ஸ்ரீ.

நடிகர், நடிகைகள் நடிப்பு :

சீரியஸ் ரோலில் விஜய் ஸ்ரீ காணப்பட்டாலும் கிளைமாக்ஸ்சில் அவரது செய்கை சபாஷ் போட வைக்கும். பரட்டை என்ற கேரக்டரை பட்டை தீட்டியிருக்கிறார்.

பிஆர்ஓ நிகில் முருகன் முதல்முறையாக கதை நாயகனாக நடித்துள்ளார். தன்னால் முடிந்தவரை ராகவன் கேரக்டரை கொடுத்துள்ளார். இவரது குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.

இதுவரை ஏற்காத ஒரு சீரியஸ் கேரக்டரில் வையாபுரி. இனி இவருக்கு தந்தை வேடங்கள் அதிகமாக வரும்.

அதிகாலை திருமணத்தை வைத்துக் கொண்டு தன் முன்னால் காதலனிடம் சிக்ககிய பறவையாக வித்யா பிரதீப்.

இளையா வரும் காட்சிகள் இளைஞர்களுக்கு இன்பமயமே. மியாவ் மியாவ் என்ற பூனை சத்தம் பூரிப்பு. சாந்தினி ஹாட்.

வித்யா பிரதீப்பின் காதலன் ராணவ் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர். சின்ன சின்ன கேரக்டரில் வரும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பில் கச்சிதம்.

முக்கியமாக வையாபுரியுடன் வரும் விக்கி தன் பயந்த சுபாவத்தால் நம்மை கவர்கிறார்.

இவர்களுடன் ஆதவன் மற்றும் சில்மிஷம் சிவா இருவரின் காமெடி (காம நெடி) உச்சகட்டம். ஆதவன் அரசாங்கத்தை கிண்டல் அடிக்கும் காட்சிகள் சிறப்பு. அதுபோல சில்மிஷம் சிவா பேசும் இங்கிலீஷ் வார்த்தைகள் ரசிக்கும் ரகம்.

பட்டையை கிளப்புதா பவுடர்?? பவுடர் படத்தின் முழு விமர்சனம்.!

தொழில்நுட்பம் :

படத்திற்கு இசையமைத்துள்ளார் லியாண்டர் லீ மார்ட்டி. பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.மேலும் சாயம் போன வெண்ணிலவே.. நோ சூடு நோ சொரணை ஆகிய பாடல்கள் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவும் இரவு நேர சூட்டிங் லைட்டிங்கும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. எடிட்டிங் கனகச்சிதம்.

தம்ப்ஸ் அப் :

  1. படத்தின் வசனங்கள்
  2. இரவு நேரத்தில் உலா வரும் போலீஸ் திருடர்களை உஷாராக்கும் வகையில் ஆரம்பித்து வருவது கிண்டல் அடிக்கப்பட்டது.
  3. மக்கள் நினைத்தால் எம்எல்ஏ வைக்கும் பயம் காட்டலாம் என்ற கருத்து.
  4. காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கான பாடம்.

தம்ப்ஸ் டவுன் ;

மனிதக்கறி என்பது கொலைக்கு நிகரானது.. ஆனால் அகோரிகள் மத்தியில் பிரபலமான மனிதக்கறியை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஒரு காட்சியில் மனிதக் கறி அடங்கிய பெட்டியை HUMAN MEAT ஹியூமன் மீட் என்ற பெயரில் ஒருவர் டெலிவரி செய்வது என்பது பெரும் கேள்விக்குறி??!? அது இயக்குனருக்கே வெளிச்சம்.