Maanadu And Powder Movie

பவுடர் படத்தை தொடர்ந்து 4 மொழிகளில் வெளியாக உள்ளது சிம்புவின் மாநாடு திரைப்படம்.

Powder Movie Release in 4 Movies : தமிழ் சினிமாவில் தாதா87 என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ. இந்த படத்தை தொடர்ந்து தற்போது பவுடர் என்ற படத்தையும் பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

பவுடர் திரைப்படத்தில் நாயகியாக வித்யா பிரதீப் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

இன்று சிம்புவின் பிறந்த நாள் என்பதால் மாநாடு படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.