Powder Movie By Vijay Sri G
Powder Movie By Vijay Sri G

தாதா 87 பட இயக்குனர் விஜய் அடுத்ததாக பவுடர் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

Powder Movie By Vijay Sri G : சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர், ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபாலா, வையாபுரி , ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது.

Dha Dha 87

கொரொனா வைரஸூக்காக மக்கள் முகமூடி அணிந்து செல்வது இந்த காலம். ஆனால் பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும்18 விதமான காதாபத்திரங்களை பற்றிய படம் தான் பவுடர்.

படத்தில் வரும் காதாபத்திரங்களை நம் வாழ்க்கையில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருப்போம் அல்லது கடந்து வந்திருப்போம். பவுடர் முகத்திற்கு மட்டும் அல்ல உடலுக்கும் கேடு தான். ஆம், போதைப்பொருள் வடிவத்தில்‌ என்பது நிதர்சனமான உண்மை.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறும். படத்தின் ஒளிப்பதிவாளர் RP (ராஜா பாண்டி) . இவர் தாதா 87 படத்தின் முலம் அறிமுகம் ஆகி பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்.தாதா 87 படத்தில் இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசு வழிகாட்டுதலின் பெயரில் படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டு உள்ளதாக படத்தயாரிப்பாளர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார். கொரோனா நிலைமைகள் சீரானதும் பவுடர் பொங்கல் வைக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.