Potato Pepper Fry
Potato Pepper Fry

Potato Pepper Fry : உருளைக்கிழங்கு என்றாலே சாதாரனமாகவே அனைவருக்கும் பிடிக்கும் அதில்லும் அதனை ஃபிரை என்றால் சொல்லவா வேண்டும் அனைவருக்கும் பசி அதிகமாக எடுக்கும். இதில் பெப்பர் சேர்பதால் உடலுக்கு எந்த கெடுதலும் வராது.

தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு – ½ கிலோ
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
சீரகம்,மிளகு பொடி – 2 ஸ்பூன்
எண்ணை, உப்பு – தேவையான அளவு
கடுகு – சிறுதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணை ஊற்றி அது சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கைவிடமால் மசாலா சேருமாறு கலந்து விட வேண்டும்.

இத்துடன் சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை குறைத்து மூடு போட்டு 10 நிமிடம் அப்படியே விட வேண்டும்.

10 நிமிடம் கழித்து கிழங்கு வெந்தவுடன் அதில் 2 ஸ்பூன் பெப்பர், சீரகம் பொடி சேர்த்து பின் கறிவேப்பிலை போட்டு நன்கு மிக்ஸ் பண்ணி 5 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பெப்பர் ஃபிரை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here