Postal Vote
Postal Vote

Postal Vote :

கோவை: வரும் மக்களவை தேர்தலில்108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கள் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை பெற தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.

திருவாரூரில் பொங்கல் பரிசு: தேர்தல் ரத்து எதிரொலி!

இதற்காக தேர்தல் நாளின் போது பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் ஓட்டு போட தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தற்போது செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வண்டிகள் மொத்தம் 950 உள்ளன. இதில், பைலட், மருத்துவ டெக்னிசீயன் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

இவர்கள் தேர்தல் நாளின் போதும் பணியில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.,

கோவை மாவட்டத்தில் 150 ஊழியர்கள் பணியாற்றும், மொத்தம் 32 ஆம்புலன்ஸ் உள்ளது.

இதில் 10க்கும் குறைவானவர்களே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.

இதனால், இவர்களால் பணி முடிந்து சென்று ஓட்டு போட முடியாத நிலை உள்ளது. எனவே கோவை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் இதே நிலை தான் இருக்கிறது.

தேர்தலில் VVPAT இயந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு தரப்படும்!

2008ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில் ‘கடந்த 2 மக்களவை தேர்தலின் போது எங்களால் ஓட்டு போட முடியவில்லை.

மேலும் இந்த தேர்தலின் போதும் நாங்கள் பணியில் ஈடுபட்டு இருப்போம். எனவே, எங்களுக்கு தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.