Bigil Vs Kaithi in Porur GK Cinemas
தீபாவளிக்கு எங்களது திரையரங்கில் பிகில் இல்லை என பிரபல தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படமும் அக்டோபர் 25-ம் தேதி நேருக்கு நேர் மோதி கொள்ள உள்ளன.

இதனால் இரண்டு தரப்பும் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் தியேட்டர்களை பிடிப்பதில் மும்மரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சென்னை போரூரில் உள்ள பிரபல தியேட்டர் ஜி.கே சினிமாஸ் நிறுவனம் தீபாவளிக்கு கைதி படம் தான் திரையிடுகிறோம்.

விநியோகிஸ்தரிடம் ஒப்பந்தம் ஏற்படாததால் பிகில் இல்லை என அறிவித்துள்ளனர். இது அப்பகுதி விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.