
சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள போர் தொழில் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் போர் தொழில்.
படத்தின் கதைக்களம் :
திருச்சி புறநகர் பகுதியில் இளம் பெண்கள் தொடர்ந்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இது குறித்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் வசம் செல்ல போலீஸ் அதிகாரி சரத்குமார் தலைமையில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெறுகிறது.
சரத்குமார் தலைமையிலான டீமில் வந்து சேர்கிறார் கத்துக்குட்டி போலீஸான அசோக் செல்வன். இவர்கள் இருவரும் இணைந்து இந்த குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? அடுத்து என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தைப் பற்றிய அலசல் :
படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் கதைக்குள் சென்று படம் விறுவிறுப்பாக நகர தொடங்கியது.

அனுபவ அறிவு உள்ள சரத்குமார் படிப்பறிவு உள்ள அசோக் செல்வன் இருவரும் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கும் விதம் படத்தின் மீதான விறுவிறுப்பை இன்னும் அதிகமாக இருக்கிறது.
முதல் பாதியிலேயே குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் இரண்டாம் அதில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகள் நம்மை சீட்டின் நுனியில் கட்டி போடுகிறது.
பாட்டு, ஃபைட் என எதுவும் இல்லாமல் வெறும் கதை களத்தை மட்டுமே நம்பி அதையும் சிறப்பாக செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.
