நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் டைட்டிலை வைத்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் பாசிட்டிவ்வான ட்விட்டை பதிவிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்த பல அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் துணிவு திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் இப்படத்தின் டைட்டில் பெயரை வைத்து பாசிட்டிவான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், உங்களது இலக்கை நோக்கி ஓடும் போது உன்னால் முடியாது என யார் தடுத்தாலும் அனைத்தையும் தாண்டி ஓட வேண்டும் என்றால் துணிவு முக்கியம் என்று கூறும்படியான ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.