பூவே உனக்காக சங்கீதா லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Poove Unakaga Sangita With Husband : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சங்கீதா. இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்த திரைப்படம் பூவே உனக்காக. இந்த படம் தளபதி விஜயின் முதல் வெற்றி திரைப்படம். ஆனால் சங்கீதாவுக்கு அப்படி இல்லை. அதற்கு முன்னதாகவே பல வெற்றி படங்களில் இவர் நடித்திருந்தார்.

பூவே உனக்காக சங்கீதாவா இது?? இவருடைய கணவர் சிம்பு படத்தோட இயக்குனர் தான் - யார் தெரியுமா?

சினிமாவில் நல்ல வாய்ப்புகள் அமைத்துக் கொண்டிருந்த போதே ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சரவணன் தான் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தை இயக்கியவர்.

தற்போது சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். சங்கீதாவா இது என்று யோசிக்கும் அளவிற்கு ஆளே மாறிப் போய் உள்ளார்.