பூவே உனக்காக சீரியலில் இனி பூவரசியாக நடிக்கப் போவது யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Poove Unakaga Poovarasi Character Update : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கடினமான சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் முதலில் நாயகனாக நடித்து வந்தவர் வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக அசிம் நடித்து வருகிறார்.

பூவே உனக்காக சீரியலில் இனி பூவரசியாக நடிக்க போவது இவர்தான் - வைரலாகும் புகைப்படம்

மேலும் நாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா பிரீத்தி என்பவர் நடித்து வருகிறார். கன்னடம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால் இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறாத காரணத்தினால் அம்மாவின் கட்டாயத்தின் பேரில் சின்னத்திரைக்கு வந்தார்.

பூவே உனக்காக சீரியலில் விருப்பமில்லாமல் நடிக்க தொடங்கி பின்னர் விருப்பப்பட்டு நடிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூவே உனக்காக சீரியலில் இனி பூவரசியாக நடிக்க போவது இவர்தான் - வைரலாகும் புகைப்படம்

இவர் விலகிக் கொண்டதை தொடர்ந்து இனி பூவரசி கதாபாத்திரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் நடித்த வர்ஷினி நாயகியாக தொடர்வார் என தகவல்கள் கிடைத்துள்ளன.