Poovaiyar Once Again Join With Vijay

தளபதி 65இல் மீண்டும் மூன்றாவது முறையாக இணைய உள்ளார் பூவையார்.

Poovaiyar Once Again Join With Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பொங்கலன்று இப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக பார்த்து கொண்டாடி வந்தனர். தற்போது மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் 23 மில்லியன் டாலர்களை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் முதல் இடம் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தளபதி 65 திரைப்படம் ஏப்ரல் மாதம் தொடங்குவதாக தகவல் வெளியானது.

இந்த திரைப்படத்தில் பூவையார் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.