Poor peoples housing Pension | Edappadi K Palaniswami
Poor peoples housing Pension

Poor peoples housing Pension – சேலம்: சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

அதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ‘மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஜெயலலிதாவின் அரசு அதிக முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

தமிழக அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் வேர்க்கடலை உருண்டையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோமா?

மேலும் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மனுக்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மனுக்களின் மீதான தீர்வுக்குப்பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்களும் நடத்தப்படும்.

சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவில் தீர்வுகாணப்படும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் ரூ.76 லட்சத்து 25 ஆயிரம் நிதி வழங்கப்படும். சென்னைக்கு அருகில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பெரிய உணவுப் பூங்கா ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

இதன்மூலம் நமது விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். ஆசியாவிலேயே மிக உன்னதமான கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1,200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க இருக்கிறோம்.

விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு ஆகவேண்டும் என்பதற்காக இந்த புதிய திட்டங்களை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த ஆட்சி 10 நாள் தாக்குப்பிடிக்குமா.. ஒரு மாதம் தாக்குப்பிடிக்குமா? என்று சொன்னார்கள். 2 ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது.

இதற்கு முழு காரணம் மக்களும், அதிகாரிகளும் தான். உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்று கூறினார்.

மேலும் வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் வீட்டுமனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோர்களுக்கு முதியோர் உதவித் திட்டத்தை அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதன்மூலம், புதிதாக தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு, ஜெயலலிதா காலத்தில் ரூ.2 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை தற்பொழுது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதி, விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள், குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு விழாவில் பேசினார்.