Pooja Hegde Tweet About Thalapathy 65

விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே கெத்தாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Pooja Hegde Tweet About Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் இத்திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ரூபாய் 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அதனை உறுதி செய்திருந்தது. இதனையடுத்து பூஜா ஹெக்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் மீண்டும் தமிழில் நடிக்க வரேன்.‌. அதுவும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வரேன் என கெத்தாக பதிவிட்டுள்ளார். பூஜா ஹெக்டே இதற்கு முன்னதாக தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.