கொரானா வைரஸில் இருந்து மீண்டு விட்டதாக தளபதி 65 பட நாயகி பதிவிட்டுள்ளார்.

Pooja Hegde Recovered From COVID19 : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி படத்திலும் இவர் நடித்து வருகிறார். தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

கொரானா பரிசோதனையில் நெகட்டிவ்.. ஹாப்பி மூடில் தளபதி 65 நாயகி

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில்தான் அவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று இருந்து மீண்டு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எடுத்த கொரானா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் என வந்திருப்பதாக பூஜா ஹெக்டே அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.