Pooja Hegde Pair With Vijay

தளபதி 65 படத்தின் ஹீரோயினி யார் என்பதைக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Pooja Hegde Pair With Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அடுத்ததாக தளபதி விஜயின் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக முதலில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.