Pooja Hegde Pair With Suriya

தளபதி விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pooja Hegde Pair With Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வாடிவாசல் திரைப் படத்தை முடித்துவிட்டு பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சிறுத்தை சிவா ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் முழுவதுமாக ஜூலை மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அதன் பின்னர் சூர்யாவை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தான் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் தற்போது தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார், இந்தப் படத்திலே நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.