விஜய்க்கு ஜோடியாக அதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பிரபல நடிகை.

Pooja Hegde Pair With Suriya : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடி ஆனதைத் தொடர்ந்து அடித்த லக்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை.!!

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் அவர் தயாரித்து வரும் படம் ஒன்றில் 45 நிமிடம் இடம்பெறும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

விஜய்க்கு ஜோடி ஆனதைத் தொடர்ந்து அடித்த லக்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை.!!

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கபோவது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் பூஜா ஹெக்டே தான் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க உள்ளார். இதனை முறையாக அறிவிக்க வேண்டும் என்பதால் படக்குழு அமைதி காத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.