பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde in Childhood Photo : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் இவர் முகமூடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

9 வருடங்களுக்கு பிறகு தற்போது தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.

சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.