பீஸ்ட் படத்தின் சூட்டிங் குறித்து புகைப்படத்துடன் தகவல் வெளியாகி உள்ளது.

Pooja Hegde Finished Beast Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தடகள வீரர் உள்பட 6 பேருக்கு கொரோனா : ஒலிம்பிக் அமைப்பாளர்கள் திணறல்..

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான நடன காட்சிகள் படமாக்கப்பட்டதாக ஏற்கனவே கூறப்பட்டது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் சூட்டிங்கை முடித்த பூஜா ஹெக்டே வேறொரு படத்திற்காக மும்பை சென்றுள்ளார். இவர் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பூஜா ஹெக்டேவிற்கான சூட்டிங் அதற்குள்ள முடிஞ்சிடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.