Pooja Hegde About Corona Life

தளபதி 65 படத்தின் நாயகி பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pooja Hegde About Corona Life : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். தளபதி 65 படத்தினைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, பிந்தைய வாழ்க்கை என அனைவரது வாழ்வும் மாற்றமடைந்துள்ளது. முன்பு ஜாலியாக சுற்றித் திரிந்தோம். ஆனால் தற்போது பாதுகாப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் வாழ வேண்டி உள்ளது.

மீண்டும் முக கவசம் இல்லாமல் வாழும் வாழ்க்கையை வாழ ஏங்குவதாக தெரிவித்துள்ளார். தற்போது எங்கு சென்றாலும் ஒரு பயத்துடன் இருக்க வேண்டி உள்ளது. தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் பயப்பட வேண்டி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என கூறியுள்ளார்.