பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினிக்கு டப்பிங் கொடுத்த சின்னத்திரை நடிகை யார் என தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். சியான் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் நடிகைகளின் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகைகள் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினிக்கு டப்பிங் கொடுத்த சின்னத்திரை நடிகை - முதல் முறையாக வெளியான தகவல்

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தது தமிழ் சின்னத்திரை நடிகை தான் என தெரியவந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினிக்கு டப்பிங் கொடுத்த சின்னத்திரை நடிகை - முதல் முறையாக வெளியான தகவல்

ஆமாம் சின்னத்திரை நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான தீபா வெங்கட் தான் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்துள்ளார். இவர் நயன்தாரா சமந்தா உட்பட பல்வேறு நடிகைகளுக்கும் பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.